தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை
தேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமை என்னை (2)
ஐயா வாழ்க வாழ்க உம் நாமம் வாழ்க
1.
உன்னதத்தில் தேவனுக்கே
மகிமை உண்டாகட்டும் இந்தப்
பூமியிலே சமாதானமும்
பிரியமும் உண்டாகட்டும் ஐயா – தேவனுக்கே
2.
செவிகளி நீர் திறந்து விட்டீர்
செய்வோம் உம் சித்தம் இந்தப்
புவிதனிலே உம் விருப்பம்
பூரணமாகட்டுமே ஐயா – தேவனுக்கே
3.
எளிமையான எங்களையே
என்றும் நினைப்பவரே எங்கள்
ஒளிமயமே துணையாளரே
உள்ளாத்தின் ஆறுதலே – தேவனுக்கே
4.
தேடுகிற அனைவருமே
மகிழ்ந்து களிகூரட்டும் இன்று
பாடுகிற யாவருமே
பரிசுத்தம் ஆகட்டுமே ஐயா – தேவனுக்கே
5.
குறை நீக்கும் வல்லவரே
கோடி ஸ்தோத்திரமே பாவக்
கறை போக்கும் கர்த்தாவே
கல்வாரி நாயகனே ஐயா – தேவனுக்கே